அன்னிய நேரடி முதலீடு: ஐ.நா., அறிக்கை ; உலகளவில் இந்தியாவுக்கு 5வது இடம் அன்னிய நேரடி முதலீடு: ஐ.நா., அறிக்கை ; உலகளவில் இந்தியாவுக்கு 5வது இடம் ...  ‘சிமென்ட்’ நிறுவனங்கள் லாபம் 30 சதவீதம் அதிகரிப்பு ‘சிமென்ட்’ நிறுவனங்கள் லாபம் 30 சதவீதம் அதிகரிப்பு ...
‘மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
06:32

புதுடில்லி : நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ அதன் வாகனங்களின் விலையை, இரண்டாவது காலாண்டில் அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான உள்ளீட்டு விலை மிகவும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்பின் ஒரு பகுதியை, வாடிக்கையாளர்களுக்கு விலையை ஏற்றுவதின் வாயிலாக சமாளிக்க முடிவு செய்துள்ளது.மாடல்கள்நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக, ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.இருப்பினும், எந்த அளவுக்கு விலையை அதிகரிக்க இருக்கிறது என்பது குறித்து, எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், மாடல்களை பொறுத்து, விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல், 16ம் தேதியன்று, 1.6 சதவீதம் அளவுக்கு அதிகரித்து அறிவித்தது. 18ம் தேதிஇதற்கு முன், கடந்த ஜனவரி, 18ம் தேதியன்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை அதிகரிப்பால், 34 ஆயிரம் ரூபாய் வரை விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.மாருதி சுசூகி, ‘ஆல்ட்டோ’விலிருந்து, ‘எஸ் கிராஸ்’ வரையிலான கார்களை, 2.99 லட்சம் ரூபாயிலிருந்து, 12.39 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)