பதிவு செய்த நாள்
24 ஜூன்2021
21:25

மும்பை:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின், 44வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாகும். காரணம், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, பல முக்கிய அறிவிப்புகளை, இந்த கூட்டத்தின் போது தான் அறிவிப்பார். இதற்கேற்ப பல தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
குறிப்பாக, மிகவும் எதிர்பார்க்கப்படும், புதிய மலிவு விலையிலான ‘ஸ்மார்ட்போன்’ அறிமுகம் குறித்தும் தெரிவித்தார்.முகேஷ் அம்பானியின் உரையிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:
* ‘5ஜி’ சேவைக்காக, ‘கூகுள் கிளவுட்’ உடன், ‘ஜியோ’ இணைந்து, இந்தியாவின் டிஜிட்டல் தளத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
* ஜியோ, 5ஜி சேவைக்காக, கூகுள் கிளவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளும்
* ஜியோ 1 ஜி.பி.பி.எஸ்., வேகத்திலான 5ஜி சேவையை பரிசோதித்துள்ளது
* இந்தியாவில், முழுமையான 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக, ஜியோ இருக்கும்
* கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ எனும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை, செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று அறிமுகம் செய்ய உள்ளது
* சவுதி அரேபியாவின், ‘அராம்கோ’ நிறுவனத்தின் தலைவர் யாசிர் அல்ருமேயன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில், செயல் சாரா இயக்குனராக இணைகிறார்
* அரோமாவுடனான ரிலையன்ஸ் கூட்டு குறித்த விஷயங்கள் இவ்வாண்டில் முடிவாகும்
* இது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஆரம்ப முயற்சியாகும்
* ரிலையன்ஸ், புதிய எரிசக்தி வணிகத்தை தொடங்கி, திருபாய் அம்பானி பசுமை எரிசக்தி வளாகத்தை உருவாக்க உள்ளது
* இந்த புதிய எரிசக்தி வணிகத்தில், மொத்த முதல்கட்ட முதலீடு, 75 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்
* எரிசக்தி துறையில், நான்கு பிரிவுகளில் மிகப்பெரும் தொழிற்சாலைகள் துவக்கப்படும்.
உலகிலேயே மலிவான போன்
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், செப்டம்பர் 10 தேதியன்று, ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.‘ஜியோ’ நிறுவனம் கூகுளுடன் இணைந்து, இந்த ஸ்மார்ட்போனை தயாரிக்கிறது.“இந்தியாவில் மட்டுமல்ல; உலகி லேயே, இது தான் மிகவும் விலை மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும்” என்று, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஒரு ஸ்மார்ட் போனுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, ‘ஆண்ட்ராய்டு’ போனாக இது இருக்கும்.முதலில் இந்தியாவிலும், பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்படும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.இந்த முயற்சி இந்தியாவில், ‘2ஜி’ பயன்பாட்டாளர்களை, ‘4ஜி’ தொழில்நுட்பத்துக்கு உயர்த்தும் ஒரு முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.விலை உள்ளிட்ட விபரங்கள் இனிமேல் தான் வெளியாகும்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|