டி.டி.எஸ்., அபராதத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? டி.டி.எஸ்., அபராதத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ... வாடிக்கையாளர்களுக்கு இணயற்ற ஷாப்பிங் நன்மைகளை வழங்கும் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இணயற்ற ஷாப்பிங் நன்மைகளை வழங்கும் அமேசான் பிரைம் ...
ஆயிரம் சந்தேகங்கள் அரி­தான நாண­யங்­களை எங்கே மாற்­ற­லாம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2021
01:55

நான்கு ஆண்­டு­க­ளாக, ஒரு வங்­கி­யில் சம்­ப­ளக் கணக்கு வைத்­தி­ருந்­தேன். அதி­க­மான ரொக்­கப் பரி­வர்த்­தனை செய்­த­தாக என் கணக்கை முடக்­கி­விட்­ட­னர். என்ன செய்ய வேண்­டும்?

ஆர்.ஜெயந்தி, சென்னை.

வங்­கிக் கிளைக்­கு போய், கணக்கை புதுப்­பிக்க என்ன வழி என்­பதை விசா­ரி­யுங்­கள். பெரும்­பா­லும் இதற்­கென்று உள்ள படி­வத்தை பூர்த்தி செய்து, ‘பான்’ அட்டை நகலை இணைத்து, மனு கொடுக்க வேண்டி இருக்­க­லாம்.அதி­க­மான ரொக்­கப் பரிவர்த்தனை ஏன் செய்­தீர்­கள் என்பதற்கு நியா­ய­மான கார­ணங்­க­ளைத் தெரிவி­யுங்­கள். வங்கி ஏற்­க­லாம்.

பைக் வாங்கி, 18 மாதங்­கள் தவணை கட்­டி­னேன். தனி­ந­பர் கடன் வாங்கி அதை­யும் கட்டி முடித்­து­விட்­டேன். தடை­யில்லா சான்று கேட்­டால், தரா­மல் இழு­பறி செய்கிறார்­கள். என்ன செய்ய?
மு.பால­சுப்­ர­ம­ணி­யன், மதுரை.
மாதத் தவணை செலுத்­தும்­போது, ஒரு சில தவ­ணை­களில், ஒரு­ சில நாட்­கள் தாம­தம்
ஏற்­பட்­டி­ருக்­க­லாம். அதற்கு வட்டி போட்டு, நீங்­கள் செலுத்­து­வ­தற்­காக காத்­தி­ருப்­பர். அப்­ப­டி­யெல்­லாம் ஒன்றும் இல்லை என்­றால், இந்த வலை­த­ளத்­துக்கு (https://www.consumercomplaints.in/) போய், வங்­கி­யின் பெயரை, ‘டேக்’ செய்து புகார் எழு­துங்­கள். விரைந்து பதில் சொல்­கி­றார்­கள்.

என்­னி­டம், பழைய அரி­தான ரூபாய் நோட்­டு­கள், நாணயங்கள் உள்­ளன. அதை எங்கு மாற்றுவது?

விஷால், கோவை.
இந்­திய ரிசர்வ் வங்கி அலு­வல­கத்­தில் உள்ள தனிப்­பி­ரி­வுக்­குபோய் கேளுங்­கள். அவர்­கள் மாற்­றித் தரு­வர். மிக மிக அரிய நாண­யங்­க­ளுக்கு பெரிய மவுசு இருக்­கிறது. இணைய வணிக வலை­த­ளங்­களில், அரிய நாணயங்­களை புகைப்­ப­டம் எடுத்து வலை­யேற்­றம் செய்யுங்கள். அவற்­றுக்கு நல்ல விலை கிடைக்­க­லாம்.

ஒரு வங்­கி­யில், அட­மா­னக் கடன் பெற்­றேன். வட்டி 16 சத­வீ­தம். வட்டி விகி­தங்­களை முன்பு சொல்­ல­வில்லை. இப்­போது கேட்­டால் சரி­யான விளக்­கம் இல்லை. இரண்டு ஆண்­டு­க­ளாக தவணை செலுத்தி வரு­கி­றேன். இதற்கு ரிசர்வ் வங்­கி­யில் புகார் செய்ய முடி­யுமா?

சி.ரமேஷ், திருப்­பூர்.
வட்டி எவ்­வ­ளவு என்று தெரியா­மல் எப்­படி கடன் வாங்­கி னீர்­கள்? எப்­படி 2 ஆண்­டு­க­ளாக
தவ­ணைத் தொகையை செலுத்தி வரு­கி­றீர்­கள்? இதெல்­லாம் தெரி­ய­வில்லை என்று
சொன்­னால் யாரும் நம்ப மாட்­டார்­கள்.நீங்­கள் கையெ­ழுத்­திட்­டுக் கொடுத்­துள்ள
ஆவ­ணங்­க­ளி­லேயே வட்டி விகித விப­ரம் இருக்குமே? எந்த அமைப்­பும் உங்­கள் புகாரை
எடுத்­துக்­கொள்ளாது.


என்­னு­டைய வங்கி ‘டெபிட் கார்டு’ திடீ­ரென்று, ‘அன்-ஆத­ரைஸ்டு’ என்று வரு­கிறது.
என்­ன­வாக இருக்­கும்?

கணேஷ்குமார், சிவ­காசி.
உங்­கள் மொபைல் எண், வங்கி­யில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் இருக்க­லாம். வங்கி உங்­கள் டெபிட் கார்டை தடை செய்­திருக்கலாம். 24 மாதங்­க­ளாக பயன்­ப­டுத்­த­வில்லை என்­றால்,
உங்­கள் வங்­கிக் கணக்கு, ‘டார்­மென்ட்’ ஆகி­வி­டும். 21 மாதங்­கள் பயன்­ப­டுத்­த­வில்லை
என்­றால், ‘இன்­ஆக்­டிவ்’ ஆகி­வி­டும். ‘பான்’ எண் விப­ரங்­க­ளைப் பதி­ய­வில்லை என்றா­லும் இந்­தப் பிரச்னை வரும்.அல்­லது, இந்த மாதத்­தி­லேயே அனு­ம­திக்­கப்­பட்ட 4 முறைக்கு மேல் பணம் எடுக்க முயற்சி செய்­தி­ருப்­பீர்­கள். அத­னா­லும், ‘அன் ஆத­ரைஸ்டு’ செய்தி வரக்­கூ­டும்.

என் மனைவி பெய­ரில் ஒரு நிறுவ­னத்­தின் பங்­கு­கள் உள்ளன. ஆனால் மூல சான்­றி­தழ்­கள் எங்கோ தொலைந்­து­விட்­டன. நகல் வாங்க யாரை அணுக வேண்­டும்?

கே. அய்­யா­துரை, அம்­பத்­துார்.
உட­ன­டி­யாக, அந்த நிறு­வனத்­துக்கு, ‘இ – மெ­யில்’ வாயி­லாகவோ, கடி­தம் வாயி­லா­கவோ, ‘ஷேர் சர்டிபி­கேட்’ தொலைந்த விபரத்தை தெரி­விக்­க­வும்.பின்­னர், 500 ரூபாய், ‘நான் ஜூடி­ஷி­யல்’ ஸ்டாம்ப் பேப்­ப­ரில், ‘இண்­டெம்­னிட்டி பாண்டு’, 100 ரூபாய், ‘அபி­ட­விட்’ ஆகி­ய­வற்றை நிறு­வ­னத்­தி­டம் தாக்­கல் செய்­வ­தோடு, காவல்­துறை­யில் புகா­ர­ளித்து, முதல் தகவல் அறிக்கை பெற வேண்டும்.ஷேர் சர்­டி­பி­கேட் தொலைந்­து­ விட்­டது என்­பதை பத்­தி­ரி­கை­யில் விளம்­ப­ர­மாக கொடுக்­க­வேண்­டும். ஷேர் சர்­டி­பி­கேட்கொடுத்த நிறு­வ­னம், உங்­க­ளது ஆவ­ணங்­களைப் பரி­சீ­லனை செய்து, நகல் சான்­றி­தழ் வழங்­கும்.

நான், ‘எஸ்­ஸார் ஆயில்’ நிறு­வன பங்­கு­களை வைத்­துள்­ளேன். பங்குச் சந்­தை­யில் இந்த
நிறு­வ­னம் இல்லை என தெரிய வரு­கிறது. பணத்தை வாங்­கு­வது எப்­படி?

எஸ். கார்த்­தி­கே­யன், தேனி.
‘எஸ்­ஸார் ஆயில்’ நிறு­வ­னத்தை, ஒரு ரஷ்ய நிறுவனம் வாங்கி தற்­போது அது ‘நயாரா எனர்ஜி’ என்ற பெய­ரில் இயங்கு­கிறது.முத­லில் பதி­வா­ளரை அணுகி, உங்­கள் பங்கு
பத்­தி­ரத்தை, ‘டிமேட்’ வடி­வத்­துக்கு மாற்­றிக்­கொள்­ளுங்­கள். அப்­போது அது, ‘நயாரா எனர்ஜி’ பங்கு­க­ளாக கிடைக்­கும்.

தனி­யார் வங்­கி­களில் நிரந்­தர வைப்பு பாது­காப்­ப­ானதா? திவால், அல்­லது வேறு கார­ணங்­க­ளுக்­காக வங்கி மூடப்­பட்­டால் தொகை திரும்ப கிடைக்­குமா? தனி­யார் வங்கி, அரசு வங்கி இவற்றில் எதில் முத­லீடு செய்­ய­லாம்?

சுரேஷ், மதுரை.

இந்­தி­யா­வில், அரசு அல்­லது தனி­யார் வங்­கி­களில் செய்­யப்­படும் நிரந்­தர வைப்பு, தொடர் வைப்பு, சேமிப்பு அல்­லது நடப்புக் கணக்கு ஆகிய அனைத்­துக்­கும், 5 லட்­சம் ரூபாய் வரை டிபா­சிட் காப்­பீடு உண்டு.இங்கே வங்­கி­கள் திவா­லாக அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. சிரம திசை­யில் இருக்­கும் பல வங்­கி­கள், பெரிய வங்­கி­க­ளோடு இணைக்­கப்­பட்டு,
முத­லீட்­டா­ளர்­க­ளின் பணத்­துக்கு உத்­த­ர­வா­தம் அளிக்­கப்­ப­டு­கிறது.

வங்­கி­யல்­லாத நிதி நிறு­வ­னங்­கள், வீட்­டுக்­க­டன் நிறு­வ­னங்­கள், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் பெறும் முத­லீ­டு­க­ளுக்கு இந்­தப் பாது­காப்பு கிடை­யாது. வட்டி விகி­தங்­க­ளைப் பொறுத்­தும் உங்கள் தேவை­யைப் பொறுத்­தும், எந்த வங்­கி­யில் முத­லீடு செய்­வது என்­பதை முடி­வு­செய்து கொள்­ளுங்­கள்.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014
என்ற நமது அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,

pattamvenkatesh@gmail.com

98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)