‘டிஜிட்டல்’ துறையில் 10 மடங்கு வளர்ச்சி ‘டிஜிட்டல்’ துறையில் 10 மடங்கு வளர்ச்சி ...  ‘டெலிமார்க்கெட்டிங்’ தொல்லை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் ‘டெலிமார்க்கெட்டிங்’ தொல்லை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்களுக்கு ஏற்ற ‘கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2021
18:52

‘கிரெடிட் கார்டு’ பணம் செலுத்துவதற்கான சாதனம் என்றாலும், சரியாக பயன்படுத்திக் கொண்டால், செலவுகளில் சேமிப்பை அளித்து, வாழ்வியலுக்கு உதவக்கூடியது. இதற்கு, நிலுவைத் தொகை மீதான வட்டியை தவிர்க்க, ‘பில்’ தொகையை உரிய காலத்தில் செலுத்துவது அவசியம்.


அதே நேரத்தில் கிரெடிட் கார்டு, ஒருவரது செலவு பழக்கம், பட்ஜெட் போன்ற அம்சங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும். அப்போது தான், கிரெடிட் கார்டு மூலம் அதிக பயன் பெற முடியும். பொருத்தமான கிரெடிட் கார்டை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் வருமாறு:


கார்டு தகுதி:


பல வங்கிகள் பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அவை அளிக்கும் பலன்களும் வேறுபட்டவை. ஆனால், ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒரு விதமான நிபந்தனைகளும், தகுதி அம்சங்களும் இருக்கும். கார்டு பெற விரும்புகிறவர்கள், முதலில் தாங்கள் தகுதி பெறும் கார்டுகளை அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.


செலவு பழக்கம்:


மேலும், எல்லா கார்டுகளும் ஒருவருக்கு பொருத்தமானதாக இருக்காது என்பதை உணர வேண்டும். தேர்வு செய்யும் கிரெடிட் கார்டு மற்றும் அதன் சலுகைகள், செலவு பழக்கத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். கார் மற்றும் பைக் வைத்திராதவர்களுக்கு, பெட்ரோல் சலுகை புள்ளிகள் அளிக்கும் கார்டு பயனற்றது.


பட்ஜெட்:


கிரெடிட் கார்டு அம்சங்கள் பட்ஜெட்டிற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு சில கார்டுகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்தால், 10 சதவீத ‘கேஷ்பேக்’ சலுகை அளிக்கும் கார்டு, மாதம் இந்த தொகைக்கு ஷாப்பிங் செய்பவர்களுக்கு பலன் அளிக்கும். ஆனால், 40 ஆயிரத்திற்கு கேஷ்பேக் அளிக்கும் கார்டு ஏற்றதாக இருக்காது.


கடன் அளவு:


வருமான அளவு, கிரெடிட் ஸ்கோருக்கு ஏற்ப கார்டுக்கான கடன் அளவு அளிக்கப்படும். இது வங்கிக்கு வங்கி வேறுபடும் என்றாலும், அதிக கடன் அளவை அளிக்கும் கார்டை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம், கார்டு பயன்பாடு விகிதத்தை சாதகமான விகிதத்திற்குள் வைத்திருப்பது சாத்தியம்.


கட்டணங்கள்:


கிரெடிட் கார்டுக்கான வருடாந்திர கட்டணங்களையும் கவனிக்க வேண்டும். சில கார்டுகள் ஆண்டு செலவுக்கு ஏற்ப கட்டணத்தில் சலுகை அளிக்கின்றன. வழக்கமான கேஷ்பேக் சலுகை தவிர, கூடுதல் சலுகைகளையும் பல கார்டுகள் அளிக்கின்றன; இவற்றையும் பரிசீலிக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)