பதிவு செய்த நாள்
06 ஜூலை2021
20:21

புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், படுக்கை விரிப்பு, துண்டு உள்ளிட்ட தயாரிப்புகளில் மிக பிரபலமாக இருக்கும், ‘போர்ட்டிகோ’ பிராண்டை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:இந்தியாவில் படுக்கையறை, குளியலறை பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது, போர்ட்டிகோ.இந்நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ இதன் பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
‘கிரியேட்டிவ்’ குழுமத்திற்கு சொந்தமான இந்த பிராண்டின் விற்பனை, ஸ்டோர்கள் வாயிலாகவும், ‘ஆன்லைன்’ வாயிலாகவும் நடைபெற்று வருகிறது. இந்த பிரிவில், இந்தியாவில் போர்ட்டிகோ இரண்டாவது பெரிய பிராண்டாக, சந்தைக்கு வந்த மிக குறுகிய காலத்திலேயே உயர்ந்துவிட்டது.
போர்ட்டிகோவுக்கு, நியூயார்க்கிலும் வணிக செயல்பாடுகள் இருந்தாலும், இந்தியாவில் இருப்பவை குறித்து மட்டுமே, ‘டீல்’ பேசப்பட்டு வருகிறது.சில்லரை வர்த்தகத்தில் தன்னை நிலைநாட்டி கொள்ளும் வகையில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ எடுத்து வரும் முயற்சிகளின் தொடர்ச்சியே இது. விரைவில் கையகப்படுத்தியது குறித்த செய்திகள் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|