பதிவு செய்த நாள்
07 ஜூலை2021
21:34
சென்னை:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், ‘டி.வி.எஸ்., என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்.பி.,’ என்ற புதிய வகை ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து டி.வி.எஸ்., நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் சார்பில், டி.வி.எஸ்., என்டார்க் 125 ரேஸ் எக்ஸ்.பி., என்ற புதிய வகை ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், திறன் மற்றும் வடிவமைப்பு ஆகியவை என்டார்க் ஸ்கூட்டரின் குறிப்பிடத்தக்க அம்சம்.
தற்போது, ‘வாய்ஸ் அசிஸ்ட்’ தொழில்நுட்பம் கூடுதலாக இணைக்கப்பட்டு, ஸ்மார்ட் கனெக்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக டிரைவ் மோடு மாற்றுதல், வழிகாட்டுதல் உட்பட, 15 கட்டளைகளை, குரல் வழி செயல்படுத்த முடியும். மேலும், ‘ரேஸ் மோடு, ஸ்டிரீட் மோடு’ என, இரண்டு டிரைவ் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ரேஸ் மோடில், ஒரு மணி நேரத்தில் 98 கி.மீ., வரை செல்ல முடியும். இதன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை, 83 ஆயிரத்து 275 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|