‘அடேயப்பா’ வளர்ச்சியில் ‘ஆன்லைன்’ வர்த்தகம் ‘அடேயப்பா’ வளர்ச்சியில் ‘ஆன்லைன்’ வர்த்தகம் ...  ஆயிரம் சந்தேகங்கள்: காசோலையை பலமுறை  டிபாசிட் செய்யலாமா? ஆயிரம் சந்தேகங்கள்: காசோலையை பலமுறை டிபாசிட் செய்யலாமா? ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பழைய தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ அவசியமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2021
19:25

தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்கான ‘ஹால்மார்க்’ முத்திரை தொடர்பான முக்கிய அம்சங்களை நுகர்வோர் அறிந்திருக்க வேண்டும்.

தங்க நகைகளை வாங்குவோர், வடிவமைப்பு, பொலிவு, விலை ஆகிய அம்சங்களை கவனிப்பதோடு, அவற்றில் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். ஏனெனில், ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனும் விதிமுறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹால்மார்க் முத்திரை செயல்படும் விதம் பற்றி நுகர்வோர் அறிந்திருப்பது அவசியம் ஆகிறது.

தர நிர்ணயம்


தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்வதற்காகவும், இது தொடர்பான முறைகேடுகளை தடுப்பதற்காகவும், ஹால்மார்க் முத்திரை கட்டாயம் எனும் விதிமுறை இந்த ஆண்டு துவக்கத்தில் அமலுக்கு வர இருந்தது. எனினும் கொரோனா பாதிப்பு சூழல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, கடந்த மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. முதல் கட்டமாக, நாடு முழுதும் உள்ள 256 மாவட்டங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்கள் இதில் அடங்கும்.புதிய விதிமுறையின் கீழ், நகைக் கடை நிறுவனங்கள் இனி, 14, 18 மற்றும் 22 காரட் கிரேடு கொண்ட தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். மேலும், இதற்கான விபரங்களை தங்க நகை மீதான ஹால்மார்க் முத்திரையில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்திய தர நிர்ணய கழகத்தின் சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே நகைகளை விற்பனை செய்ய முடியும்.

இந்த சான்றிதழையும் நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கான மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்க கடிகாரங்கள், குந்தன் வகை நகைகள், தங்க பேனாக்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முத்திரையை பார்வையிடலாம்


நுகர்வோர் தங்க நகையின் தரத்தை உறுதி செய்து கொள்ளும் வகையில் ஹால்மார்க் முத்திரையை கூர்ந்து கவனிக்க வேண்டும். நுகர்வோர் நகையில் ஹால்மார்க் முத்திரையை பார்வையிடலாம். இதை பெரிதாக்கி பார்க்க லென்ஸ் வசதியையும் கோரலாம். தர நிர்ணய கழகத்தின் முக்கோண முத்திரை, தங்க காரட் அளவு, நகை நிறுவன முத்திரை மற்றும் சான்று வழங்கிய மையத்தின் விபரம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை இல்லை எனில், நுகர்வோர் இது தொடர்பாக புகார் செய்யலாம்.


தர நிர்ணயத்தை பூர்த்தி செய்யவில்லை எனில், அதற்கு ஏற்ப நுகர்வோருக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்.புதிய நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை அவசியம் என்றாலும், ஏற்கனவே உள்ள பழைய நகைகள் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பழைய நகைகளை நகைக் கடை நிறுவனங்கள் அவற்றின் மதிப்புக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். பழைய நகைகளின் மதிப்பு இதனால் பாதிக்கப்படாது.


மேலும் வாய்ப்பிருந்தால், இந்த நகைகள் மீது ஹால்மார்க் முத்திரை பொறித்துக் கொள்ளலாம். பழைய நகைகளை உருக்கி செய்யப்படும் புதிய நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை பொறித்துக் கொள்ளலாம்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)