ஆயிரம் சந்தேகங்கள்: காசோலையை பலமுறை  டிபாசிட் செய்யலாமா? ஆயிரம் சந்தேகங்கள்: காசோலையை பலமுறை டிபாசிட் செய்யலாமா? ...  தங்க நகை  நுகர்வு அதிகரிக்க  புதிய ஒப்பந்தம் தங்க நகை நுகர்வு அதிகரிக்க புதிய ஒப்பந்தம் ...
ஐ.டி., வல்லுனர்கள் காட்டில் மழை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2021
19:40

புதுடில்லி:கொரோனா தொற்று பரவலுக்கு பின், நிறுவனங்கள் டிஜிட்டல்மயமாவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்து உள்ளது.

பலர் தற்போதைய நிறுவனத்தை விட்டுவிட்டு, வேறு நிறுவனத்தில் பணியாற்ற வருவதற்கு, 70 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வரும் வாய்ப்புகளை ஏற்க மறுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.பணியமர்த்தும் துறையில் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் ஆய்வறிக்கை வாயிலாக மேலும் தெரியவந்துள்ளதாவது:

கொரோனாவுக்கு முன், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க தொழில் வல்லுனர்கள், வேறு நிறுவனத்துக்கு வருவதற்கு, 15 முதல் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வை எதிர்பார்த்தனர்.ஆனால், இப்போது அவர்கள், 50 சதவீதத்திலிருந்து, 70 சதவீதம் வரை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது கேமிங், ஆரோக்கியம், கல்வி, செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு என பல்வேறு வணிக பிரிவுகளில், அனுபவம்மிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, டி.சி.எஸ்., உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள், ஏராளமானோரை பணியமர்த்தி வருகின்றன. டி.சி.எஸ்., நிறுவனம், ஜூன் காலாண்டில் மட்டும், 20 ஆயிரத்து, 409 பேர்களை புதிதாக பணியமர்த்தி உள்ளது. இதுவும் தேவையை அதிகரித்திருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.அனுபவம் மிக்கவர்களுக்கு மட்டுமின்றி, புதியவர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில் தேவைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)