இந்தியா – சீனா வர்த்தகம் 62.7 சதவீதம் அதிகரிப்பு இந்தியா – சீனா வர்த்தகம் 62.7 சதவீதம் அதிகரிப்பு ...  எம்.எஸ்.எம்.இ., மீட்புக்கான  குழு விரைவில் அறிவிப்பு எம்.எஸ்.எம்.இ., மீட்புக்கான குழு விரைவில் அறிவிப்பு ...
மொத்தவிலை பணவீக்கம் சற்றே சரிவு கண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2021
20:19

புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை அடிப்படையிலான பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில், 12.07 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. கச்சா எண்ணெய், உணவு பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததால், மொத்தவிலை பணவீக்கம் குறைந்துள்ளதாக, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக, நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூனில் சற்று சரிந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜூனிலும், பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

ஜூன் மாதத்தில், மொத்தவிலை பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, கடந்த ஆண்டு ஜூனில், இந்த விகிதம் மிகக் குறைவாக, மைனஸ் 1.81 சதவீதமாக இருந்தது என்பது தான்.

மேலும், பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள், ரசாயன பொருட்கள், அடிப்படை உலோகங்கள் ஆகியவற்றின் விலை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட மிகவும் அதிகமாக இருந்ததும், பணவீக்க விகிதம் அதிகரிக்க காரணமாகிவிட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)