பதிவு செய்த நாள்
16 ஜூலை2021
22:09

மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தற்போது தங்களது கார்களுக்கான கடனை மாருதி சுசூகி ஸ்மார்ட் பைனான்ஸ் மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், ஆன்லைனில் பெறலாம். மாருதி சுசூகி ஸ்மார்ட் பைனான்ஸ் சேவையானது தற்போது அரினா மற்றும் நெக்ஸா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது. இதனை இந்தியா முழுவதும் பெறலாம். இந்த வசதி பலருக்கும் உதவும் வகையில் பல்வேறு துறை சார்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் www.marutisuzuki.com மற்றும் www.nexaexperience.com ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுசூகி ஸ்மார்ட் பைனான்ஸ் வசதி டிசம்பர் 2020-ம் ஆண்டு குறிப்பிட்ட சில பெருநகரங்களில் மட்டும் துவங்கப்பட்டு, இன்று வரை சுமார் 25 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களின் வருகையைப் பதிவுசெய்துள்ளது. கார் வாங்குவதற்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தி, அவர்களின் அனைத்து நிதி தேவைகளுக்குமான ஒரே இடமாக மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் உள்ளது. சரியான கடன் வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது, மிகச்சரியான கடன் திட்டத்தினை தேர்வு செய்வது, கடனுக்கு விண்ணப்பித்தல் முதல் கடன் பெறுவது தொடர்பான உரிய செயல்முறைகள் அனைத்தையும் இணையவழியில் / ஆன்லைனில் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகளை மாருதி ஸ்மார்ட் பைனான்ஸ் வழங்குகிறது. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அவர்களின் காருக்கான தோராயமான மதிப்பினை பெற முடியும். கூடுதலாக, பல்வேறு துறை சார்ந்த பணிகளில் இருக்கும் வாடிக்கையாளர் பயனடையும் வகையில், இணை-விண்ணப்பதாரருக்கும் கடன் வழங்கும் வசதியினையும் வழங்குகிறது.
மாருதி சுசூகி இந்தியாவின், சீனியர் எக்சிக்யூட்டிவ் டைரக்டர்ஷஷான்க் ஸ்ரீவஸ்தாவா பேசுகையில், “மாருதி சுசூகி ஸ்மார்ட் பைனான்ஸ் தான் வாடிக்கையாளர்கள் கார் கடன் பெறுவதற்கான அனைத்து செயல்முறைகளையும் ஆன்லைனில் மேற்கொள்ள அனுமதிக்கும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் தளமாகும். தற்போது 14 நிதி நிறுவனங்களின் கூட்டணியுடன் எங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கேற்ற பிரத்தேயகமான கடன் பெறும் வாய்ப்புகளை இதன் மூலம் வழங்கிவருகிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|