பதிவு செய்த நாள்
17 ஜூலை2021
19:01
மும்பை:‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனம், அதன், ‘சேட்டக்’ மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவை நாக்பூரில் துவங்கியுள்ளது.
இந்நிறுவனம் இதற்கு முன்இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவை, புனே மற்றும் பெங்களூரு நகரங்களில் துவங்கியது. துவங்கிய 48 மணி நேரத்துக்குள்ளாகவே, இரு இடங்களிலும் முன்பதிவு முழுமையாக முடிந்துவிட்டது.இதன் தொடர்ச்சியாக, தற்போது நாக்பூரில் முன்பதிவை துவக்கி இருக்கிறது. இங்கும் அதே போன்ற வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பிற நகரங்களிலும், விரைவில் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.முதல் சுற்று முன்பதிவுகள் முடிந்து, அவற்றுக்கான வாகனங்கள் இம்மாத இறுதியில் வினியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பதிவை, www.chetak.com எனும் இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளலாம் என்றும்; நாக்பூரில் எக்ஸ் ஷோரூம் விலை 1.43 லட்சம் ரூபாயில் துவங்குவதாகவும் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு, துவங்கிய 24 மணி நேரத்துக்குள்ளாகவே, ஒரு லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளதாக ஓலா தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|