பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
04:02

புதுடில்லி : கடந்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தில், 50 சதவீதம் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2.60 லட்சம் கோடி : இந்தியாவில் இதுவரை, சவுதி அரேபியாவிலிருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்துள்ளது. கடந்த நிதியாண்டில், 2.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதியளவு, 1.22 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், சுவிட்சர்லாந்திலிருந்து மட்டும் இறக்குமதி ஆகியுள்ளது.சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கான இறக்குமதி, 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில் தங்கம் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறக்குமதியை பொறுத்தவரை சவுதி அரேபியா, நான்காவது இடத்தை வகித்து வந்தது. தற்போது இந்த இடத்தை சுவிட்சர்லாந்து பிடித்து உள்ளது.மேலும் வழக்கம் போலவே, உலகளவில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகள் வரிசையில், சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்து உள்ளது.சுத்திகரிப்பு மையம்சுவிட்சர்லாந்து, உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மையமாக உருவெடுத்து வருகிறது. இங்கு நல்ல தரத்திலான தங்கம் கிடைக்கிறது. மேலும் மிகப்பெரிய போக்குவரத்து இணைப்பு மையமாகவும் சுவிட்சர்லாந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|