பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
04:03

புதுடில்லி : இந்திய ஓ.டி.டி., சந்தையின் மதிப்பு, 10 ஆண்டுகளில் 1.13 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு, 11 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், 2030ல், 93,750 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுஉள்ளது. மிகப்பெரிய வளர்ச்சிசிறப்பான நெட்வொர்க் வசதி, டிஜிட்டல் இணைப்பு, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும் என, ‘ஆர்.பி.எஸ்.ஏ., அட்வைசர்ஸ்’ நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஓ.டி.டி., சந்தை, இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும். இந்த வளர்ச்சிக்கான அடுத்த அலை, இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை நகரங்களிலிருந்து வரும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி; உள்ளூர் மற்றும் பிராந்திய ஓ.டி.டி., நிறுவனங்களும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. 46.27 கோடிவரும் 2025ல் ஓ.டி.டி., தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 46.27 கோடியாக அதிகரிக்கும்.
இந்திய நுகர்வோர், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகமாக வீடியோ பார்க்கும் பழக்கத்துக்கு வந்துள்ளனர். அதிலும் குறைந்த கால அளவிலான வீடியோக்களை, ஸ்மார்ட்போனில் பார்ப்பது அதிகரித்து வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|