பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
19:12

புதுடில்லி:நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளது என்றும், பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருவதாகவும் எச்.டி.எப்.சி., நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்து உள்ளார்.
இரண்டாவது அலை காரணமாக, இந்திய பொருளாதாரம், கடந்த நிதியாண்டில் காணப்பட்டதை போன்ற போக்கையே பிரதிபலிக்க வாய்ப்புள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் பாதி பலவீனமாகவும், இரண்டாவது பாதி கணிசமான அளவுக்கு வலுவானதாகவும் இருந்தது போலவே, இப்போதும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எச்.டி.எப்.சி., நிறுவனத்தின், 44வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின்போது அவர் கூறி உள்ளதாவது:நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. மீட்சி ஏற்பட்டு வருகிறது. நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, அன்னிய நேரடி முதலீடு ஆகியவை சாதனை அளவை எட்டிஉள்ளன.
மேலும், பங்குச் சந்தைகளின் போக்கும் மிதமானதாக இருக்கின்றன. விவசாய வளர்ச்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு தானிய உற்பத்தி, 30.5 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை வாயிலாக, வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அரசாங்கமும் கொரோனா தொற்றின் பாதிப்புகளை எதிர்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இருப்பினும், கொரோனா தொற்றின் கணிக்க முடியாத தன்மை, ஒரு சவாலாக இருக்கும்.
உலகம் முழுதுமே தொடர்ச்சியான தொற்றுநோய்களால் எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால், பொருளாதார மீட்சி சீரற்றதாகவும், சமமற்றதாகவும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|