பதிவு செய்த நாள்
29 ஜூலை2021
20:49

புதுடில்லி:உச்ச நீதிமன்றம், ‘அமேசான் – பியூச்சர் ரீடெய்ல்’ வழக்கில், தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், கிஷோர் பியானியின் ‘பியூச்சர் ரீடெய்ல்’ நிறுவனத்தை, 24 ஆயிரத்து 731 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தது. இதை எதிர்த்து, பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தில், 4 சதவீத பங்குகளை வைத்துள்ள அமேசான் நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
அத்துடன், சிங்கப்பூர் அவசர மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் முறையிட்டு, சாதகமான தீர்ப்பையும் பெற்றுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், பியூச்சர் ரீடெய்ல் விற்பனைக்கு தடைகோரி, அமேசான் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணையில், ‘இந்திய சட்டத்தின்படி, சிங்கப்பூர் அவசர மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் தீர்ப்பு செல்லாது’ என, பியூச்சர் ரீடெய்ல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நாரிமன் தலைமையிலான அமர்வு நேற்று அறிவித்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|