பதிவு செய்த நாள்
29 ஜூலை2021
20:56

புதுடில்லி:உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த ‘வின்ட்லஸ் பயோடெக்’ நிறுவனம், மூலக்கூறு மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரிவாக்கத் திட்டங்களுக்காக புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, நிதி திரட்ட உள்ளது.
நிறுவனர்கள் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்களின் 51 லட்சம் பங்குகளும், 165 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. பங்கு வெளியீடு, ஆக.,4ல் துவங்கி, ஆக.,6ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை 448 ரூபாய்; அதிகபட்ச விலை 460 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு 50 சதவீத பங்குகள்; நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சில்லரை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 30 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் பங்குகள் வேண்டி, சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, வின்ட்லஸ் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|