பதிவு செய்த நாள்
30 ஜூலை2021
19:55

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2.74 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மத்திய அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் உள்ள இடைவெளி, நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது. நடப்பு 2021 - 22ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரை மத்திய அரசுக்கு, 5.47 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இதே காலத்தில், செலவினங்கள், 8.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதனால், 2.74 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது, பட்ஜெட் மதிப்பீட்டில் 18.2 சதவீதம். கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிதிப் பற்றாக்குறை 83.2 சதவீதமாக இருந்தது என, பொது கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.8 சதவீதம், அதாவது, 15 லட்சத்து 6,812 கோடி ரூபாயாக இருக்கும் என, மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|