பதிவு செய்த நாள்
30 ஜூலை2021
19:59

புதுடில்லி:‘மொபைல் போனில் சுய விபரங்கள் அளிக்கக் கோரி வரும் போலி அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என, மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான – சி.ஓ.ஏ.ஐ., அறிவுறுத்தி உள்ளது.
சமீப காலமாக, மொபைல்போன் சேவை நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக கூறி, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளரின் தகவல்கள் கேட்பது அதிகரித்துள்ளது. ‘தகவல் தரத் தவறினால், ‘சிம்’கார்டு முடக்கப்படும்; மொபைல்போனில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது’ என எச்சரிப்பதால், பலர் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்களை அளிக்கின்றனர். அவற்றின் மூலம், பண மோசடி நடைபெறுவதாக, சைபர் கிரைம் பிரிவிற்கு ஏராளமான புகார்கள் வருகின்றன.
‘எனவே, மொபைல்போன் சேவை நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக கூறி, சுய தகவல்களை கேட்டால் தர வேண்டாம்’ என, சி.ஓ.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.அதுபோல, எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்திகளில் சுய விபரங்களை தருமாறு கோரினாலும், குறிப்பிட்ட எண்ணை அனுப்பி தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தகவல்களை தர, ஒரு சில ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்யுமாறு குறுஞ்செய்தியில் இணைப்பு கொடுத்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, சி.ஓ.ஏ.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|