பதிவு செய்த நாள்
31 ஜூலை2021
19:59

சென்னை:தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஒயர்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில், 1.77 லட்சமாக உயர்ந்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைதொடர்பு சேவையில் வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங்களை, இந்திய தொலைதொடர்பு ஆணையம், மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.தற்போது, மே மாத வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங்களை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஒயர்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது.இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 1.7 கோடியாக இருந்தது. இது மே மாதத்தில், 1.6 லட்சமாக குறைந்துள்ளது.
இது தவிர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்திலும் சேர்த்து, 5.71 லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர். பி.எஸ்.என்.எல்., ஒயர்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில், 1.77 லட்சமாக உயர்ந்துள்ளது.இதர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து, 1.87 லட்சம் ஒயர்லைன் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|