பதிவு செய்த நாள்
31 ஜூலை2021
20:04

புதுடில்லி:இந்திய பங்குச் சந்தை முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை துவக்க இருக்கிறார்.
இதையடுத்து இந்தியாவில், ‘போயிங்’ நிறுவனம் மீண்டும் வலுவாக கால் பதிக்க வாய்ப்பு இருப்பதாக, நிபுணர்கள் கருதுகின்னர்.‘இந்தியாவின் வாரன் பபெட்’ என பலரால் அழைக்கப்படும், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, உள்நாட்டு விமான சேவையில் இருக்கும் தேவையை பயன்படுத்தி கொள்ளும் வகையில்,
‘ஆகாஷா ஏர்’ எனும் புதிய விமான சேவை நிறுவனத்தை துவக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக இவர், இண்டிகோ’ மற்றும் ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனங்களின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளுடன் கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.ஆகாஷா ஏர், விண்ணில் பறக்க துவங்கும்போது, கொரோனா பாதிப்புகள் பெருமளவில் மட்டுப்பட்டு, நல்ல சாதகமான சூழல் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெட் ஏர்வேஸ் தரைதட்டிய பின், போயிங் நிறுவனத்துக்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறது.இந்நிலையில், ஆகாஷா ஏர் உதயமாகும்பட்சத்தில், போயிங் தன்னை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|