பதிவு செய்த நாள்
31 ஜூலை2021
20:07

புதுடில்லி: ‘பீட்சா ஹட், கே.எப்.சி., கோஸ்டா காபி’ ஆகியவற்றுக்கான இந்திய உரிமம் பெற்றுள்ள, ‘தேவ்யானி இன்டர்நேஷனல்’ நிறுவனம், 4ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
இதையடுத்து ஒரு பங்கின் விலை 86 – 90 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பங்கு வெளியீடு, 4ம் தேதியன்று துவங்கி, 6ம் தேதியுடன் முடிவடைகிறது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 1,838 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 440 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், தற்போதிருக்கும் பங்குதாரர்களின் 15.53 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
முதலீட்டாளர்கள், குறைந்தபட்சமாக 165 பங்குகள் கொண்ட ஒரு தொகுப்பை வாங்கி கொள்ளலாம். அல்லது, அதன் மடங்குகளில் அதிகமாகவும் வாங்கலாம்.இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு அனைத்து கடனையும் அடைக்கவும், பொதுவான நிறுவன செலவுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்நிறுவனம் 297 பீட்சா ஹட் ஸ்டோர்கள், 264 கே.எப்.சி., ஸ்டோர்கள், 44 கோஸ்டா காபி மையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறது.இந்தியாவில், துரித சேவை உணவக பிரிவில், இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|