பதிவு செய்த நாள்
31 ஜூலை2021
20:13

புதுடில்லி:மிக குறைந்த விலையிலான மின்சார வாகனத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், டாடா மோட்டார்ஸ், உள்நாட்டு வணிகத்திலும், அதன் பிரிட்டிஷ் துணை நிறுவனமான, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனத்திலும், கிட்டத்தட்ட 29 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
இதற்கிடையே, மின்சார வாகன தயாரிப்புக்காக, தனியாக நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.மின்சார வாகனங்களை பொறுத்தவரை, 2025ம் ஆண்டுக்குள், 10 மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சகாய விலையிலான மின்சார வாகனத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ‘நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 25 சதவீதம், மின்சார வாகனங்கள் பிரிவின் வாயிலாக இருக்கும்’ என எதிர்பார்க்கிறோம்.
இது தற்போதைய நிலையை விட, 2 சதவீதம் அதிகமாகும்.மேலும், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பை துவக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தனி நிறுவனமாக இருக்கும். அத்துடன் வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம், 1,000 மின்னேற்று நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|