10 ஆயிரம் ‘சபாரி’ கார் டாடா மோட்டார் சாதனை 10 ஆயிரம் ‘சபாரி’ கார் டாடா மோட்டார் சாதனை ...  ‘ஓலா’ மின்சார ஸ்கூட்டர்: 15ம் தேதி அறிமுகம் ‘ஓலா’ மின்சார ஸ்கூட்டர்: 15ம் தேதி அறிமுகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
குறைந்த விலையில் டாடா மின்சார கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
20:13

புதுடில்லி:மிக குறைந்த விலையிலான மின்சார வாகனத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், டாடா மோட்டார்ஸ், உள்நாட்டு வணிகத்திலும், அதன் பிரிட்டிஷ் துணை நிறுவனமான, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனத்திலும், கிட்டத்தட்ட 29 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

இதற்கிடையே, மின்சார வாகன தயாரிப்புக்காக, தனியாக நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.மின்சார வாகனங்களை பொறுத்தவரை, 2025ம் ஆண்டுக்குள், 10 மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சகாய விலையிலான மின்சார வாகனத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ‘நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 25 சதவீதம், மின்சார வாகனங்கள் பிரிவின் வாயிலாக இருக்கும்’ என எதிர்பார்க்கிறோம்.

இது தற்போதைய நிலையை விட, 2 சதவீதம் அதிகமாகும்.மேலும், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பை துவக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தனி நிறுவனமாக இருக்கும். அத்துடன் வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம், 1,000 மின்னேற்று நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:‘ஓலா’ மின்சார ஸ்கூட்டர், விற்பனை துவங்கிய முதல் நாளில் மட்டும் 4 வினாடிகளுக்கு ஒரு ஸ்கூட்டர் என்ற ... மேலும்
business news
புதுடில்லி:‘மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான ‘ஸ்விப்ட்’ காரின் விற்பனை, 25 லட்சத்தை தாண்டி ... மேலும்
business news
புதுடில்லி:கான்பூரைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எல்.எம்.எல்., மின்சார இருசக்கர வாகன ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடுவதற்கு போர்டு நிறுவனம் திட்ட மிட்டுள்ளதாக தகவல் ... மேலும்
business news
சென்னை:சென்னையில் தலைமை அலுவலகத்துடன் செயல்படும், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், தென் ஆப்ரிக்காவில், அதன் வாகன ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)