பதிவு செய்த நாள்
03 ஆக2021
01:34

புதுடில்லி : நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில், அதற்கு முந்தைய இரண்டு மாதங்களை விட, மிக வலுவாக அதிகரித்துள்ளது. தேவைகள் அதிகரிப்பு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஆகியவை காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது .
பிரிட்டனை சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், ஜூலை மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டு உள்ளது. தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜூன் மாதத்தில் 48.1 புள்ளிகளாக இருந்த நிலையில், ஜூலையில் 55.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில், அதற்கு முந்தைய 10 மாதங்களில் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், ஜூலையில் வலுவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.‘‘ஜூன் மாதத்தில் காணப்பட்ட சரிவில் இருந்து, இந்திய தயாரிப்பு துறை மீண்டு வருவது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ‘‘மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் உற்பத்தியில், மாதாந்திர அதிகரிப்பை வெளிப்படுத்தி உள்ளன,’’ என ஐ.எச்.எஸ்., மார்கிட் பொருளாதார இணை இயக்குனர் பாலியானா டி லிமா தெரிவித்துஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|