பதிவு செய்த நாள்
06 ஆக2021
20:10

புதுடில்லி:‘பாப்புலர் வெகிக்கிள்ஸ் அண்டு சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இந்த நிறுவனம், பயணியர் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, சேவைகள் மற்றும் பழுது நீக்குதல், உதிரி பாகங்கள் வினியோகம் உள்ளிட்டவற்றில் இயங்கி வருகிறது.மேலும், மாருதி சுசூகி, ஹோண்டா, ஜாகுவார், லேண்டு ரோவர், டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் முகவராகவும் இந்நிறுவனம் உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் போது இந்நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. அத்துடன், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 42.66 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, கடன்களை அடைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், சென்ட்ரம் கேப்பிட்டல், டி.ஏ.எம்., கேப்பிட்டல் அட்வைசர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|