பதிவு செய்த நாள்
06 ஆக2021
20:13

புதுடில்லி:ஆட்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கை, கடந்த ஜூலை மாதத்தில், இதுவரை இல்லாத வகையில் அதிகரித்து, கொரோனாவுக்கு முன் இருந்த நிலையை தாண்டி உள்ளது.
இது, பொருளாதாரம் வலுவாக மீட்சி கண்டுவருவதை காட்டுவதாகவும்; கொரோனா பாதிப்பிலிருந்து வணிகங்கள் மீண்டு வருவதை உணர்த்துவதாகவும் இருப்பதாக, ‘நாக்ரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில், பணியில் அமர்த்தும் போக்கு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாதத்தை விட, ஜூலையில் 11 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தைவிட, 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இப்போது ஜூலையில், ஜூன் மாதத்தை விட, 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளில் சுணக்கம் இருந்த நிலையில், அடுத்து வந்த இரு மாதங்களிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஜூலை மாதத்தில், தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் மென்பொருள் சேவை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள், ஜூன் மாதத்தை விட, 18 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலுமே, ஜூலையில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|