பதிவு செய்த நாள்
06 ஆக2021
20:16

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அதன் பணக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், நேற்று முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
‘ரெப்போ’ வட்டி விகிதத்தை மாற்றாமல், தற்போதிருக்கும் 4 சதவீதம் எனும் அதே நிலையை தொடர இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றுக்கான வட்டியிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் இத்தகைய கடன் வாங்கியவர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம்.
மேலும், வங்கிகளின் ‘டிபாசிட்’டுகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதத்திலும் எந்த மாற்ற மும் செய்யப்படாமல், தற்போது நடைமுறையில் இருக்கும் 3.35 சதவீதம் என்ற நிலையே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
*ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 4 சதவீதமாகவே தொடரும்
*ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் என்ற நிலையே தொடரும்
*வட்டி விகிதத்தில் இதற்கு முன், கடந்த 2020 மே 22 அன்று மாற்றத்தை மேற்கொண்டது. அதன்பின் நடைபெற்ற 7 கூட்டங்களின் முடிவிலும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
* பணக் கொள்கை குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக வட்டி விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என தெரிவித்துள்ளனர்
* நடப்பு நிதியாண்டில், சில்லரை பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 5.1 சதவீதமாக குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது
*நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதிஆண்டில் 9.5 சதவீதமாக இருக்கும் என்ற முந்தைய கணிப்பிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை
* கடந்த 2019 பிப்ரவரி முதல் இதுவரை 250 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது
* அடுத்த பணக் கொள்கை கூட்டம், அக்டோபர் மாதம் 6 – 8 தேதிகளில் நடைபெற உள்ளது.
குறையும் கடன் சுமை
பணக் கொள்கை முடிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறிய தாவது: தனி நபர்களுக்கான வீட்டு வசதி மற்றும் வணிக ரீதியான ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் கடனுக்கான வட்டி விகித குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும். ஏனெனில், இந்த இரு பிரிவுகளுமே அதிகளவிலான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததை அடுத்து, வங்கிகளும் குறிப்பிடத்தக்க அளவில் வட்டியை குறைத்துள்ளன. கடன் சந்தையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் பெரிய தொழில்கள் ஆகியவற்றுக்கான வட்டி விகித குறைப்பு பரிமாற்றம் வலுவாக இருக்கிறது. குறைந்த வட்டி விகிதம் கடன் சுமையை குறைக்க உதவியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம், முன்தேதியிட்ட வருமான வரிச் சட்டப் பிரிவை நீக்கி, புதிய வருமான வரிச் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது, சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|