பதிவு செய்த நாள்
06 ஆக2021
20:49

புதுடில்லி:‘பியூச்சர்’ குழுமத்தின் சில்லரை வணிகங்களை, ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனம் வாங்குவது குறித்து அமேசான் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பு, அமேசான் நிறுவனத்துக்கு சாதகமாக வந்ததை அடுத்து, ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனங்கள் இவ்விவகாரத்தில் பெரும் பின்னடவை சந்தித்துள்ளன. பியூச்சர் ரீட்டெய்ல் வணிகங்களை 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்குவது என, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம், இணைப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
இந்தியாவில் செல்லாது
ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என, பியூச்சர் குழுமத்தில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமேசான் நிறுவனம், உச்ச நீதிமன்றத்திலும், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்திலும் வழக்கு தொடுத்தது. இதையடுத்து, சிங்கப்பூர் நடுவர் மன்றம், ரிலையன்ஸ் – பியூச்சர் நிறுவன இணைப்பு ஒப்பந்தத்துக்கு தடை விதித்தது.
சிங்கப்பூரில் அமேசானுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து, இந்த தீர்ப்பு இந்தியாவில் செல்லாது என கூறி, தீர்ப்பை அமல்படுத்துவதை எதிர்த்து, பியூச்சர் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று அமல்படுத்த, இந்திய சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.
தீர்ப்பு வந்ததை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை செயல்படுத்த, இருக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்ற உத்தேசித்துள்ளதாக பியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சரிவைக் கண்டனதீர்ப்பை அடுத்து, பியூச்சர் ரீட்டெய்ல் நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று 10 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன. இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை 2 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|