பதிவு செய்த நாள்
07 ஆக2021
20:35

புதுடில்லி:சேவைகள் துறை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 28 சதவீத வளர்ச்சி காணும் என, ‘சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து கவுன்சிலின் தலைவர் மானக் தவார் கூறியதாவது:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் இது 28 சதவீத வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கிறோம்.அரசு இத்துறைக்கு தொடர்ந்து சலுகைகளை வழங்கினால், தற்போது காணப்படும் இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடித்திருக்கும்.
மேலும், புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மேலும் காலம் தாழ்த்தாமல் அறிவித்தால், ஏற்றுமதியாளர்கள் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் விலகும்.அரசாங்கம், மூலதன அணுகல் மற்றும் செலவினங்களில் கவனம் செலுத்த வேண்டும். சில துறைகளுக்கு தொழில் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
மேலும், அறிவுசார் சொத்துரிமை, நிதி சேவைகள், பொழுதுபோக்கு சேவைகள், கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற வணிக பிரிவுகளுக்கு, முன்னுரிமை சந்தை மேம்பாட்டு மானியங்களை விரிவாக்கம் செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|