பதிவு செய்த நாள்
10 ஆக2021
19:14

புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனம் புதிதாக துவங்கி இருக்கும் வணிகமான, ‘ரிலையன்ஸ் நியு எனர்ஜி சோலார்’ நிறுவனம், பில்கேட்ஸ் மற்றும் சில முதலீட்டாளர்களுடன் சேர்ந்து, ‘அம்பிரி’ எனும் நிறுவனத்தில், முதலீட்டை மேற்கொண்டு உள்ளது.
மாசசூசெட்ஸைச் சேர்ந்த அம்பிரி நிறுவனம், மின்சார கிரிட்டுகளுக்கு தேவையான பேட்டரிகளை தயாரித்து வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தில் ரிலையன்ஸ், பில்கேட்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்கள், மொத்தம் 1,066 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.இதில், ரிலையன்ஸ் 370 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொண்டுஉள்ளது.
இதை அடுத்து, அம்பிரி நிறுவனத்தின், 4.23 கோடி பங்குகள் ரிலையன்ஸ் வசம் வரும்.கடந்த ஜூன் மாதத்தில், முகேஷ் அம்பானி, ‘கிளீன் எனர்ஜி’ பிரிவில், மொத்தம் 75 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|