பதவி விலகுகிறார் ஆதி கோத்ரெஜ் பதவி விலகுகிறார் ஆதி கோத்ரெஜ் ...  கொரோனா சூழலிலும் தொடரும் முதலீடு  கொரோனா சூழலிலும் தொடரும் முதலீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘மொபைல் போன்கள் வாயிலாக முதலீடு செய்வது அதிகரித்துள்ளது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2021
20:36

புதுடில்லி;பங்குச் சந்தைகளில், சில்லரை முதலீட்டாளர்கள் வரவு அதிகரித்துள்ள நிலையில், கொரோனா காலத்தில் மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக வர்த்தகம் செய்வதும் அதிகரித்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் தலைவர் அஜய் தியாகி தெரிவித்துள்ளார்.

முதலீட்டில் மட்டுமின்றி, கொரோனா காலத்தில் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியுள்ளதாவது:கொரோனா காலத்தில் பல்வேறு மாற்றங்களை நாம் காண்கிறோம். சில்லரை முதலீட்டாளர்கள் அதிகம் பேர் சந்தைக்கு வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் வாயிலாக வர்த்தகம் செய்வது அதிகரித்துள்ளது.

இன்னொரு பக்கம், சந்தையும் வேறு பிரிவுகளிலும் தன்னை விஸ்தரித்துள்ளது. உதாரணமாக, ‘ஆல்ட்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகள், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்ஸ், இன்ப்ராஸ்ட்ரெக்சர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ என பலவற்றை சொல்லலாம். இதற்கு முன் இத்தகைய வாய்ப்புகள் சந்தையில் கிடையாது.

இப்போது உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், இந்திய பத்திர சந்தைகளில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன. அவை இப்போது வங்கி நிதியை அதிகம் எதிர்பார்ப்பதில்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)