பதிவு செய்த நாள்
15 ஆக2021
19:44

இந்தியர்களில் பெரும்பாலானோர் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் முதலீட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இணைய நிதி சேவை நிறுவனமான ஸ்கிர்ப்பாக்ஸ், நிதி சுதந்திரம் தொடர்பான ஆய்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிதி சுதந்திரம் ஆய்வு அறிக்கை, ஆய்வில் பங்கேற்றவர்களில், 60 சதவீதம் பேர் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் முதலீட்டை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.மேலும் 38 சதவீதம் பேர், கொரோனா சூழலிலும் முதலீடு அளவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதை இது உணர்த்துகிறது.
மியூச்சுவல் பண்டுகள், வைப்பு நிதி மற்றும் பங்குகள் பிரபலமாக முதலீடு வாய்ப்புகளாக அமைகின்றன.ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேருக்கு மேல், முறையான நிதி திட்டமிடலை மேற்கொள்வதை இலக்காக கொண்டுள்ளனர்.
இதற்காக நிதி ஆலோசகரின் தொழில் முறை உதவியை நாடத்தயாராக இருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 62 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வருவது தொடர்பாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|