பதிவு செய்த நாள்
17 ஆக2021
18:53

புதுடில்லி:ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., மற்றும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான இ.பி.எப்.ஓ., ஆகியவை, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு உதவும் வகையில், நிதியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.
இது குறித்து மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் கூடுதல் செயலர் அனில் அகர்வால் கூறியுள்ளதாவது:நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 16 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தேசிய வழிகாட்டி திட்டத்தை ஏற்படுத்த, ஜப்பானை அடிப்படையாக கொண்ட, ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதேபோல் எல்.ஐ.சி.,யின் தலைவர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக தனியே நிதியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல், இ.பி.எப்.ஓ., நிறுவனமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான நிதியை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.இந்தியாவில், 6,000 ‘ஏஞ்சல்’ முதலீட்டாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் 3 லட்சம் பேர் உள்ளனர். இதனால் அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்கள், விரைவில் ஏஞ்சல் முதலீட்டாளர்களாக மாறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|