பதிவு செய்த நாள்
17 ஆக2021
18:54

புதுடில்லி:இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை வேகமாக வளர்ச்சி காணும் எனவும், 2030ல் அது 2.96 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக ஏற்றம் பெறும் எனவும், அமெரிக்காவை சேர்ந்த நிர்வாக ஆலோசனை நிறுவனமான, ‘கார்னி’ தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் மின்னணு வர்த்தக சந்தை, கடந்த 2019ம் ஆண்டு நிலவரப்படி, 29 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருந்தது. இந்த சந்தை விரைவில் அபரிமிதமான வளர்ச்சி பெற்று, 2030ம் ஆண்டில், 2.96 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக உயரும் என எதிர்பார்க்கலாம்.
இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஆன்லைன் வாயிலாக பொருட்களை வாங்கும் போக்கு ஆகியவை அதிகரித்து வருவதால், சந்தை வளர்ச்சி பெறும்.கொரோனாவுக்கு பின் சில்லரை வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பொருட்களை ஆன்லைனில் வாங்கும்போது, அதன் மதிப்பை மனதில் கொண்டு வாங்கும் வகையில் மாற்றம் பெற்றுள்ளனர்.
தற்போது மக்களின் தேவையில் 4 சதவீதம் அளவுக்கே மின்னணு வர்த்தகத்தின் பங்களிப்பு இருக்கிறது. இது 2030ல், 19 சதவீதமாக உயரும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|