பதிவு செய்த நாள்
17 ஆக2021
18:57

புதுடில்லி:நாட்டின் சில்லரை விற்பனை அதிகரித்து வருவதாகவும், அடுத்து பண்டிகை காலம் வர இருப்பதால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு முந்தைய 2019 ஜூலை விற்பனையில் 72 சதவீதத்தை, கடந்த ஜூலையில் நெருங்கி விட்டதாகவும் ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது. இது குறித்து இவ்வமைப்பின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறியதாவது: நாட்டின் சில்லரை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து பண்டிகை காலம் வர இருப்பதால், விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு முந்தைய கால விற்பனையில் 50 சதவீதம், கடந்த ஜூன் மாதம் எட்டப் பட்டது. இது ஜூலையில் 72 சதவீதமாகி உள்ளது. தென் மாநிலங்களில் மட்டும் 82 சதவீதம் எட்டப்பட்டு விட்டது.இருப்பினும், மேற்கு மாநிலங்களில் நிலைமை இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. அங்கு 57 சதவீதம் அளவுக்கே எட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாத சில்லரை விற்பனையில், துரித உணவகங்கள் 97 சதவீதத்தை எட்டிவிட்டன. சலுான் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. ஆடைகள் விற்பனை 63 சதவீதத்தை தொட்டுவிட்டது.இந்நிலையில், மேற்கொண்டு மாநிலங்களில் தடை உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், பண்டிகை காலத்தில் விற்பனை பழைய நிலைக்கு நிச்சயம் திரும்பி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|