பதிவு செய்த நாள்
17 ஆக2021
19:10

புதுடில்லி:அனில் அகர்வால் தலைமையிலான, ‘ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 1,250 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளதாக, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.பங்கு வெளியீட்டின்போது, நிறுவன ஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான பங்குகள்ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஸ்டெர்லைட் பவர் நிறுவனம், அகர்வால் மற்றும் ‘டுவின் ஸ்டார் ஓவர்சீஸ்’ கூட்டில் உருவாக்கப்பட்ட தாகும்.‘வேதாந்தா’ குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ள ஸ்டெர்லைட் பவர், மின்சாரம் பரிமாற்ற உள்கட்டமைப்பு நிறுவனமாகும்.உலகளாவியஉள்கட்டமைப்பு மற்றும் தீர்வுகள் என, இரண்டு வணிக பிரிவுகளை இந்நிறுவனம் கொண்டு உள்ளது.
இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஜே.எம். பைனான்ஷியல்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன. வேதாந்தா குழுமத்தை சேர்ந்த இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, சந்தையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|