பண்டிகைக்காக காத்திருக்கும் சில்லரை விற்பனையாளர்கள் பண்டிகைக்காக காத்திருக்கும் சில்லரை விற்பனையாளர்கள் ...  ஆனந்த் மகிந்திராவின் ‘கலக்கல்’ பகிர்வுகள் ஆனந்த் மகிந்திராவின் ‘கலக்கல்’ பகிர்வுகள் ...
ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்தை வாங்க ‘டாடா ஸ்டீல்’ ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2021
19:24

புதுடில்லி:அரசுக்கு சொந்தமான, ஆர்.ஐ.என்.எல்., எனும் ‘ராஷ்ட்ரீய இஸ்பத் நிகாம்’ நிறுவனத்தை கையகப்படுத்த, ‘டாடா ஸ்டீல்’ தயாராக இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான நரேந்திரன் கூறியுள்ளார்.

ஆர்.ஐ.என்.எல்., நிறுவனம், மத்திய உருக்கு துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு விசாகப்பட்டனத்தில் சொந்தமாக ஆலை உள்ளது.மத்திய அமைச்சரவை குழு, கடந்த ஜனவரி 27ம் தேதியன்று இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்பதற்கு, கொள்கை அளவிலான அனுமதியை வழங்கியது.

இந்நிலையில், ஆர்.ஐ. என்.எல்., நிறுவனத்தை கையகப்படுத்த, டாடா ஸ்டீல் ஆர்வமாக இருப்பதாக நரேந்திரன் தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.என்.எல்., நிறுவனத்துக்கு 22 ஆயிரம் ஏக்கர் இடம் உள்ளது. மேலும், ‘கங்காவரம்’ துறைமுகம் அருகில் இருப்பதால், நிலக்கரி மற்றும் மூலப்பொருட்களை கொண்டு வர வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்நிறுவனத்தின் ஆலை, நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் இருப்பதால், தென்கிழக்கு ஆசிய சந்தைகளை கடல் மார்க்கமாக எளிதாக அணுக இயலும். இவை எல்லாம் சாதகமான அம்சங்கள்.இதற்கிடையே டாடா ஸ்டீல் நிறுவனம், ஒடிசாவில் உள்ள, ‘நீல்சல்இஸ்பத் நிகாம்’ நிறுவனத்தை வாங்கவும்விருப்பம் இருப்பதாக, அரசுக்கு அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)