பதிவு செய்த நாள்
18 ஆக2021
20:06

புதுடில்லி:‘ஸ்மால்கேஸ் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்ததை அடுத்து, இந்தியாவில் சொத்து மேலாண்மை துறையில் நுழைந்துள்ளது, அமேசான் நிறுவனம்.
மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், அடுத்தகட்டமாக வேறு பலதுறைகளிலும் நுழைய திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நிதி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ஸ்மால்கேஸ் டெக்னாலஜியில் முதலீடு செய்து, அத்துறையிலும் இறங்கி உள்ளது அமேசான்.பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஸ்மால்கேஸ் நிறுவனத்தில், ஏற்கனவே ‘விப்ரோ’ நிறுவனர் அசிம் பிரேம்ஜியின், ‘பிரேம்ஜிஇன்வெஸ்ட்’ நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், சமீபத்தில் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது, ஸ்மால்கேஸ். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அமேசான் நிறுவனமும் இதில் முதலீடு செய்துள்ளது.ஏற்கனவே நிதி துறையைச் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ‘கேப்பிட்டல் புளோட், அக்கொ ஜெனரல் இன்சூரன்ஸ்’ ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது அமேசான். தற்போது சொத்து மேலாண்மை பிரிவிலும் இறங்கி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|