பதிவு செய்த நாள்
18 ஆக2021
20:08

மும்பை:மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, வர்த்தகத்தின் துவக்கத்தில், அதன் வரலாற்றில் முதன் முறையாக 2.42 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இருப்பினும், இறுதியில் 2.41 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ துவக்கத்தில் முதன் முறையாக 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. இது, சந்தை மதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியதை அடுத்து, முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் எண்ணத்துடன் வேகமாக தங்களுடைய பங்குகளை விற்பனை செய்யத் துவங்கவும் சரிவு ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மும்பை பங்குச் சந்தை நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பும் சரிந்தது.எச்.டி.எப்.சி., வங்கி மீதான தடைகள் சிலவற்றை ரிசர்வ் வங்கி நீக்கியதை அடுத்து, வர்த்தகத்தின் துவக்கத்தில் இவ்வங்கி பங்குகள் உயர்ந்தன. ஆனால், பின்னர் முதலீட்டாளர்களின் லாபம் காணும் போக்கால் சரிவைக் கண்டன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’யும் வர்த்தகத்தின் துவக்கத்தில், புதிய உச்சமான 16 ஆயிரத்து 702 புள்ளிகளை தொட்டு, இறுதியில் சரிவைக் கண்டது. குறிப்பாக பல வங்கித் துறை பங்குகள் சரிவைக் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|