பதிவு செய்த நாள்
18 ஆக2021
20:14

புதுடில்லி:புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான தடையை ரிசர்வ் வங்கி நீக்கிவிட்டதாக, எச்.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கியின் ‘இன்டர்நெட்’ வங்கி, மொபைல் வங்கி, பணம் செலுத்துவது போன்ற சேவைகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை சிக்கல்கள் எழுந்தன. இதையடுத்து, இவ்வங்கிக்கு டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில், ரிசர்வ் வங்கி சில தடை உத்தரவு களை பிறப்பித்தது. அவற்றில் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கான தடையும் ஒன்று.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது புதிய கிரெடிட் கார்டு வழங்குவதற்கான தடையை நீக்கி உள்ளதாக எச்.டி.எப்.சி., தெரிவித்துள்ளது. இருப்பினும், புதிய டிஜிட்டல் வணிக அறிமுகங்களை செய்வதற்கான தடை தொடரும் என தெரிவித்துள்ளது.தடை நீக்கப் பட்டதை அடுத்து, ரிசர்வ் வங்கியின் அனைத்து விதிமுறைகளையும் சரியாகப் பின்பற்றுவோம் என, எச்.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் தடை நீக்கப்பட்டதை அடுத்து, பங்குச் சந்தைகளில், எச்.டி.எப்.சி., வங்கி பங்குகளின் விலை நேற்று வர்த்தகத்தின் துவக்கத்தில் கிட்டத்தட்ட 2 சதவீதம் அதிகரித்து, வர்த்தகத்தின் முடிவில் சரிவை கண்டன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|