பதிவு செய்த நாள்
21 ஆக2021
20:53

புதுடில்லி:இந்தியாவில், நடப்பு ஆண்டில் 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு விடப்படும் என, ‘கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தை வகிக்கிறது, இந்தியா.நடப்பு ஆண்டில், இந்திய சந்தைக்கு விற்பனைக்காக 17.3 கோடி ஸ்மார்ட்போன்கள் வரும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 14 சதவீதம் அதிகமாகும். இதில் 10 கோடி போன்கள், நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகள் நீக்கப்பட்டு வருவதை அடுத்து, இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான பண்டிகை காலமும் விற்பனையை அதிகரிக்க உதவுவதாக இருக்கும்.
இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு சாதகமான சந்தையாக இந்தியா இருந்துவரும் என உறுதியாக கருதலாம்.பியூச்சர் போனிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு மாறுபவர்கள் எண்ணிகை, மக்கள் தொகை ஆகியவை இதற்கு உதவிகரமாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி என்ற இலக்கை தாண்டும் என கருதுகிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|