பதிவு செய்த நாள்
24 ஆக2021
21:02
மும்பை:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் பங்குகள் விலை, நேற்றைய வர்த்தகத்தின் இடையே, இதுவரை இல்லாத வகையில் அதிகரிக்கவும், நிறுவனத்தின் சந்தை மதிப்பு, முதன் முறையாக 100 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை தொட்டது. இதன் இந்திய மதிப்பு, 7.43 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இதையடுத்து, 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை தாண்டிய இரண்டாவது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகி உள்ளது, இன்போசிஸ்.இன்னொரு நிறுவனமான, டி.சி.எஸ்., நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, நேற்றைய நிலவரப்படி 13.37 லட்சம் கோடி ரூபாயாகும்.நேற்றைய பங்குச் சந்தை வர்த்தக முடிவில், இன்போசிஸ் நிறுவன பங்கு விலை 1,722 ரூபாயாக உள்ளது.
நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், முதல் காலாண்டில் 5,195 கோடி ரூபாயை ஒருங்கிணைந்த நிகர லாபமாக ஈட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|