இந்திய சில்லரை சந்தை  ‘வால்மார்ட்’டின் கணிப்பு இந்திய சில்லரை சந்தை ‘வால்மார்ட்’டின் கணிப்பு ...  இத்துடன் முடிவடைந்தன  ‘யாகூ’ செய்தி சேவைகள் இத்துடன் முடிவடைந்தன ‘யாகூ’ செய்தி சேவைகள் ...
வார்த்தைகள் மட்டுமே உதவாது வாகன துறையினர் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2021
21:03

புதுடில்லி:இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின்61வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்று, இத்துறை குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அமிதாப் காந்த்
தலைமை செயல் அதிகாரி, நிடி ஆயோக்மின்சார வாகனத்துக்கு மாறுவது என்பது நிச்சயமாக தவிர்க்க முடியாதது என உறுதியாக நம்புகிறேன். வாகன துறையில் புதுமை, செயல்திறன் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க, அனைத்து நடவடிக்கைகளையும் நிடி ஆயோக் எடுத்து வருகிறது.சிறிய ரக கார்கள் தயாரிப்பின் உற்பத்தி மையமாக நாம் இருக்கிறோம்.

நாம் புதுமைகளை செய்யாவிட்டால், தீவிரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பை இழந்து விடுவோம்.உலகளவில் பேட்டரிக்கான விலை குறைந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட பேட்டரி விலை குறைவதால், நிலைமை சாதகமானதாக மாறியுள்ளது. எனவே தயாரிப்பாளர்கள், உலகளவில் மின்சார வாகன மாற்றத்துக்கான முன்னணி நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

கெனிச்சி அயுக்கவா

தலைவர், வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்புகொரோனா பாதிப்புக்கு முன்னதாகவே, இந்திய வாகன துறை மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. கொரோனா காரணமாக, துறையானது பல ஆண்டுகளுக்கு பின்னால் சென்றுவிட்டது. தற்போது உடனடி மற்றும் நடுத்தர கால சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை சமாளிக்கவும், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு வரவும், கவனம் சிதறாத நடவடிக்கை தேவை.

ஆர்.சி.பார்கவா

தலைவர், மாருதி சுசூகி இந்தியாவாகன துறையை ஆதரிக்கும் வகையில், அரசாங்க அதிகாரிகளால் நிறைய அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால், அதை தொடர்ந்து முயற்சிகள் எடுக்கும்போது உண்மையில் எதுவும் நடக்கவில்லை. வார்த்தைகள் மட்டுமே துறைக்கு உதவாது. உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. வாகன துறை, மின்மயமாக்கலுக்கு செல்ல வேண்டும் என்பதை நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், நான்கு சக்கர மின்சார வாகனங்களை வாங்கும் வகையில் வாடிக்கையாளர்களின் நிலை இருக்கிறதா? வேலைவாய்ப்புகளும், வருமானமும் அதிகரித்துள்ளதா? நாம் வாடிக்கையாளர்களின் நிலையை மறந்துவிட்டு பேசுகிறோம். மின்சார வாகனத்துக்கோ அல்லது வேறு எந்த வகையான வாகனத்துக்கோ மாறுவது என்பது பெரிய விஷயமல்ல; மக்கள் அதை வாங்கும் சக்தி கொண்டவர்களாக இருக்கின்றனரா? அந்த நிலையை மாற்றாமல் வாகன துறை புத்துயிர் பெறும் என நான் கருதவில்லை.

தருண் பஜாஜ்செயலர், வருவாய்த் துறை

வேலைவாய்ப்பின்மை எனும் நிலை சிறிது இருந்த போதிலும், வாகனத்தை வாங்குபவர்களாக இருப்பவர்கள் பிரிவில், வருமான நிலை உயர்ந்து வருகிறது.மக்களின் வருமான நிலை உயர்ந்தும், ஏன் கார் விற்பனை நடைபெறவில்லை?இது விலை சம்பந்தமானதா அல்லது வேறு எதுவுமா என்பதை வாகன துறையினர் ஆய்வு செய்து, என்ன மாற்றங்கள் தேவை என்பதை தெரிவிக்க எங்களிடம் மீண்டும் வர வேண்டுமென விரும்புகிறேன்.

உலகளாவிய தரம்

மாநாட்டினை ஒட்டி, பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:இந்தியாவின் பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் வாகனத் துறையின் பங்கு குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலுக்கு எதிரான தேசத்தின் போராட்டத்தின்போது, இந்த துறை எடுத்த முயற்சிகள் மிகவும் மதிக்கப்படக் கூடியவை.அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு, உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் புதிய தலைமுறை தொழில்நுட்பம் ஆகியவற்றுக்காக நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். தரம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் உலகளாவிய தரத்தை குடிமக்களுக்கு வழங்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)