பதிவு செய்த நாள்
28 ஆக2021
19:36

புதுடில்லி:கடந்த 2020 -- 21ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, நீட்டிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன.
வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளத்தில் பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும், ஆகஸ்ட் 21 மற்றும் 22ல் இணையதளம் முற்றாக செயல்படவில்லை.
இந்நிலையில், காலக்கெடுவை மீண்டும் நீட்டிக்க கோரி கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன.இது குறித்து துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையதள பிரச்னைகள் அனைத்தும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தீர்க்கப்பட்டு விட வேண்டும் என, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால், தனிநபர்களுக்கு கணக்கு தாக்கல் செய்ய 15 நாட்கள் அவகாசம் மட்டுமே கிடைக்கும். இதற்குள் அனைவரும் தாக்கல் செய்வது கடினம் என்பதால், கால அவகாசத்தை நீட்டிக்கும் கோரிக்கை பல முனைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது.
கடந்த ஆண்டில் பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. முதலில் ஜூலை 31. அதன்பின் நவம்பர் 30. அதன்பின் டிசம்பர் 31 என்றும், அடுத்து இறுதியாக ஜனவரி 10 என்றும் தொடர்ந்து அவகாசம் நீட்டிக்கப்பட்டது.அதேபோல், இந்த ஆண்டிலும் அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே அனைத்து தரப்பிலும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|