வருமான வரி தாக்கல் அவகாசம் கேட்டு கோரிக்கை வருமான வரி தாக்கல் அவகாசம் கேட்டு கோரிக்கை ...  ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஒரு கிராம் விலை 4,732 ரூபாய் ஆறாம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஒரு கிராம் விலை 4,732 ரூபாய் ...
அன்னிய நேரடி முதலீடு இரு மடங்கு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
19:40

புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அன்னிய நேரடி முதலீடு இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, 1.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் எளிதாக தொழில் செய்வது போன்ற காரணங்களால் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், மொத்த அன்னிய நேரடி முதலீடு வரவு 1.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 88 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த அன்னிய முதலீடு என்பது, பங்குகளில் வருவாய், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனங்களை உள்ளடக்கியவை ஆகும்.மதிப்பீட்டு காலாண்டில், வாகனத் துறை பங்குகளில் அதிகளவில் அன்னிய நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 27 சதவீதம் அளவுக்கு வாகனத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் 17 சதவீதம் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து, சேவைகள் துறையில் 11 சதவீதம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.அதிகளவு அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற மாநிலமாக கர்நாடகா உள்ளது. இதனையடுத்து, மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)