பதிவு செய்த நாள்
28 ஆக2021
19:46

புதுடில்லி:இந்த வாரத்தில் இரண்டு நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது உறுதியாகியுள்ளது. ‘ஆமி ஆர்கானிக்ஸ் மற்றும் விஜயா டயாக்னாஸ்டிக் சென்டர்’ ஆகிய இரு நிறுவனங்களின் பங்கு வெளியீடு செப்டம்பர் 1ம் தேதியன்று துவங்குகிறது.
ஆமி ஆர்கானிக்ஸ்:
ரசாயன துறையை சேர்ந்த ஆமி ஆர்கானிக்ஸ் நிறுவனம், செப்டம்பர் 1ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, இந்நிறுவனம், அதன் பங்கு விலையை 603 – 610 ரூபாய் என நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளது.சிறப்பு வகை ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 570 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு செப்டம்பர் 1ம் தேதி துவங்கி, 3ம் தேதியன்று முடிவடைகிறது.
திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்கவும், நடைமுறை மூலதன செலவுகளுக்கு பயன்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டில், 50 சதவீத பங்குகள் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்காகவும், 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்காகவும், மீதி 15 சதவீத பங்குகள் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்காகவும் ஒதுக்கப்பட உள்ளன.
கடந்த 2018ம் ஆண்டில் ஒரு முறை பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக முயற்சி எடுத்து, பின் அது நிறைவேறாமல் போய்விட்டது. இதனையடுத்து தற்போது வருகிறது.
விஜயா டயாக்னாஸ்டிக்:
இதே செப்டம்பர் 1ம் தேதியன்று, ‘விஜயா டயாக்னாஸ்டிக் சென்டர்’ நிறுவனமும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதன் ஒரு பங்கின் விலை 522 – 531 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் 1,895 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|