பதிவு செய்த நாள்
02 செப்2021
20:18

சென்னை:மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஆலையை, திருவள்ளூர் மாவட்டத்தில் லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவனம் அமைக்கிறது.
இது குறித்து, லுாகாஸ் டி.வி.எஸ்., நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாகனங்களுக்கான மின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் முக்கிய நிறுவனமாக லுாகாஸ் டி.வி.எஸ்., திகழ்கிறது. இந்நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான அடுத்த தலைமுறை லித்தியம்- அயான் பேட்டரிகளை, ‘செமி சாலிடு’ தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்க, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த, ‘24 எம் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்த பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை, உலக அளவிலான பாதுகாப்பு அம்சங்களுடன் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் அமைக்கப்பட உள்ளது.இதையடுத்து, நாட்டின் பிற பகுதிகளிலும் படிப்படியாக அமைக்கப்படும். சென்னை தொழிற்சாலையில், வணிக ரீதியிலான உற்பத்தி 2023ம் ஆண்டின் பிற்பகுதியில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்பான இலக்கை எட்டுவதற்கு நிறுவனம் உதவியாக இருக்கும். ஓர் ஆண்டுக்கு 5 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|