பதிவு செய்த நாள்
02 செப்2021
20:20

புதுடில்லி:‘சிப்’ என அழைக்கப்படும் ‘செமி கண்டக்டர்கள்’ தட்டுப்பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் வாகன தயாரிப்பு 20 – 25 சதவீதம் வரை பாதிக்கப்படும் என, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
செமி கண்டக்டர்கள்
அண்மைக் காலமாகவே உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், செமி கண்டக்டர் பற்றாக்குறையால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையினருக்கும் செமி கண்டக்டர்கள் தேவைப்படுவதால் தட்டுப்பாடும், போட்டியும் மேலும் அதிகரித்துள்ளது.இத்தகைய சூழலை அடுத்து, மகிந்திரா நிறுவனம் அதன் வாகன தயாரிப்பு ஆலைகளில் இம்மாதத்தில் ஏழு நாட்களை உற்பத்தி இல்லாத நாட்களாக அறிவித்துள்ளதாக பங்குச் சந்தைகளுக்கு தெரிவித்துள்ளது.
மேலும், உற்பத்தி அளவு குறைவதால் அது நிறுவனத்தின் வருவாயையும், லாபத்தையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.இருப்பினும், டிராக்டர் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி, லாரி மற்றும் பஸ் தயாரிப்புகள் இதனால் எந்த பாதிப்பையும் அடையவில்லை என்றும் மகிந்திரா தெரிவித்துள்ளது.
தட்டுப்பாடு
இதற்கு முன், ‘மாருதி சுசூகி’ நிறுவனமும் செமி கண்டக்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, இம்மாதத்தில் அதன் ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|