பதிவு செய்த நாள்
02 செப்2021
20:28

புதுடில்லி:‘இன்பினியன் பயோபார்மா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.இந்நிறுவனம் உயிரியல், இயற்பியல் மற்றும் பொறியியலை பாரம்பரிய மருந்தியல் மற்றும் உயிர்வேதியியலுடன் இணைத்து ,புதுமையான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாகும்.
இந்நிறுவனம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் அதிக மதிப்புள்ள, புதுமையான தயாரிப்பு களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த புதிய பங்கு வெளியீட்டின்போது, இந்நிறுவனத்தின் வசம் இருக்கும் 45 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், சரும பராமரிப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்கான பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றை மேம்படுத்த தேவையான உரிமங்களை கையகப்படுத்துவதற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|