பதிவு செய்த நாள்
02 செப்2021
20:29

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்டில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இ துவே, கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி 1.67 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே நடைபெற்றிருந்தது.
ஏற்றுமதியை போலவே இறக்குமதியும் கடந்த ஆகஸ்டில் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் இறக்குமதி 51.47 சதவீதம் அதிகரித்து, 3.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், இறக்குமதி 2.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதையடுத்து, ஆகஸ்டில் வர்த்தக பற்றாக்குறை 1.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், ஏற்றுமதி 66.92 சதவீதம் அதிகரித்து, 11.95 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|